2026 பெப்ரவரி 03, செவ்வாய்க்கிழமை

மஹாவெவ குளத்தில் மீன்பிடித்த எண்மர் கைது

Suganthini Ratnam   / 2013 ஜூன் 02 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.ஹிஜாஸ், ஹிரான் பிரியங்கர

வில்பத்து சரணாலயத்தின் மஹாவெவ குளத்தில் அனுமதியின்றி மீன்பிடித்ததாகக் கூறப்படும் 08 பேர் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

இந்தச் சந்தேக நபர்கள் வில்பத்து சரணாலயத்தில் உள்ள மஹாவெவ குளத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோதே கைதுசெய்யப்பட்டுள்ளதாக புத்தளம் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கைதுசெய்யப்பட்டவர்களில் 06 சிவில் பாதுகாப்பு படை வீரர்கள் அடங்குவதாகவும் அவர் கூறினார்.

சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .