2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

வறிய மக்களுக்கு உபகரணங்கள் அன்பளிப்பு

Kogilavani   / 2013 ஜூலை 13 , மு.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.என்.எம். ஹிஜாஸ் 


வனாத்தவில்லு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இஸ்மாயில் புரம் கிராமத்தில் வறிய மக்களுக்காக கூரைத்தகடுகள், சைக்கிள்கள், மீன்பிடி வலைகள் என்பனவற்றுடன் இளைஞர் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் என்பன நேற்று வெள்ளிக்கிழமை மாலை வழங்கப்பட்டது.

இதற்கென முன்னாள் வடமேல் மாகாணசபை உறுப்பினர்களான என்.டி.எம்.தாஹிர், ஏ.எச்.எம்.ரியாஸ், சட்டதரணி கமறுதீன் ஆகியோர் இணைந்து சுமார் 3 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்திருந்தனர்.

வனாத்தவில்லு பிரதேச சபை உறுப்பினர் எம்.உவைஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முன்னாள் வடமேல் மாகாணசபை உறுப்பினர்களான என்.டி.எம்.தாஹிர், ஏ.எச்.எம். ரியாஸ், கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X