2026 பெப்ரவரி 03, செவ்வாய்க்கிழமை

நடமாடும் சேவை

Suganthini Ratnam   / 2013 ஜூலை 16 , மு.ப. 09:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.என்.எம்.ஹிஜாஸ்


'தேசத்திற்கு மகுடம்' கண்காட்சியை முன்னிட்டு நடமாடும் சேவையும் மக்கள் தெளிவூட்டல் நிகழ்வும் முந்தல் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட விருதோடை பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.

அடையாள அட்டை வழங்குவதற்கான நடவடிக்கை, காணி, சுகாதாரம், பிறப்பு மற்றும் இறப்பு பதிவுகள், ஏனைய பதிவு நடவடிக்கைகள் உட்பட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதற்கான நிகழ்வில் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விக்டர் அன்டனி, முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர்களான என்.டி.எம்.தாஹிர், ஏ.எச்.எம்.ரியாஸ், கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர்கள்,  அரச உயரதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்நடமாடும் சேவையில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .