2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

புதையல் தோண்டிய ஏழு பேர் கைது

Super User   / 2013 ஓகஸ்ட் 20 , மு.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

கஹட்டகஸ்திகிரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரத்மல்கஹவௌ - உபுல்தெனிய பிரதேசத்தில் புதையல் தோண்டிக் கொண்டிருந்த  ஓய்வுபெற்ற இராணுவ வீரர் ஒருவர் உட்பட 7 பேரை கஹட்டகஸ்திகிலிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட போது சந்தேக நபர்களால் 7 அடி குழி தோண்டப்பட்டிருந்தோடு சந்தேக நபர்களிடமிருந்த 2 கையடக்க தொலைபேசி மற்றும் ஒரு தொகை பணத்தையும் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கஹட்டகஸ்திகிலிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் லக்ஷ்மன் ரன்வல அராச்சியின் ஆலோசனைப்படி குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸார் சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கஹட்டகஸ்திகிரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X