2026 பெப்ரவரி 03, செவ்வாய்க்கிழமை

சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்டவர் கைது

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 29 , மு.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.ஹிஜாஸ்

புத்தளம் - சிலாபம் வீதியில் நீண்ட நாட்களாக சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்டு வந்த வீடொன்றை முற்றுகையிட்ட முந்தல் பொலிஸார், சந்தேக நபர் ஒருவரையும் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை கைதுசெய்தனர்.

இதன்போது போத்தலில் அடைக்கப்பட்ட 120 சட்டவிரோத மதுபான போத்தல்கள், 02 பரல் போடா கலவை ஆகியவற்றையும் கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான விசாரணையை முந்தல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .