2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

வாக்குப்பெட்டிகளுடன் சென்ற வாகனங்களுடன் மோதிய வாகனம்

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 21 , பி.ப. 01:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாக்குப்பெட்டிகளுடன் சென்ற வாகனங்களை மோதி சென்ற வாகனத்தை கைப்பற்றியுள்ள பொலிஸார் அந்த வாகனத்தின் சாரதியையும் கைது செய்துள்ளனர்.

வாக்களிப்பு நிறைவடைந்து வாக்குப்பெட்டிகளை வாக்கெண்ணும் நிலையங்களுக்கு எடுத்துச்சென்றுக்கொண்டிருந்த போதே கடுவலை மேயர் பி.எச். புத்ததாஸவின் வாகனம் அந்த வாகனங்களுடன் மோதியுள்ளது.

சிலாபம் வட்டக்கள்ளி என்ற இடத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அத்துடன் முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிளுடனும் அவரது வாகனம் மோதியுள்ளது. இதனால் மூவர் காயமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தையடுத்து வாகனத்தின் சாரதியை கைது செய்துள்ளதுடன் வாகனத்தையும் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X