Sudharshini / 2015 ஜூன் 08 , மு.ப. 10:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.என்.எம். ஹிஜாஸ்
புத்தளம், எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் 19ஆவது பெற்றோர் தினம் மற்றும் மாணவர்களை பாராட்டும் விழா வித்தியாலய வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை (07) மாலை நடைபெற்றது.
பாடசாலையின் அதிபர் என்.எம். சாபி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 2014ஆம் ஆண்டு கல்வி, கல்வி சாரா நிகழ்வு மற்றும் விளையாட்டுக்களில் சாதனை படைத்து பாடசாலைக்கு கௌரவத்தினை பெற்றுத்தந்த மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் வடமேல் மாகாண சபை உறுப்பினர்களான என்.டி.எம். தாஹிர், எஸ்.எச்.எம். நியாஸ், கல்வி திணைக்கள அதிகாரிகள், புத்தி ஜீவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
54 minute ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
4 hours ago
4 hours ago