2025 மே 07, புதன்கிழமை

இரதோற்சவம் நடத்த வேண்டுமென கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

Princiya Dixci   / 2015 ஜூன் 21 , பி.ப. 01:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.ஹிஜாஸ்

புத்தளம், நாயக்கர் சேனை ஐயனார் சுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் போது இரதோற்சவம் நடத்த வேண்டுமென வலியுறுத்தி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணி, இன்று ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்றது.

குறித்த ஆலயத்தின் முன்னால் ஆரம்பிக்கப்பட்ட இந்த பேரணி, கல்பிட்டி பிரதான வீதி வரை சென்று, புத்தளம் - கல்பிட்டி வீதியில் இரதோற்சவம்; நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தி கோசமிடப்பட்டது.

ஆலயத்தின் புனர்த்தாபன கும்பாபிஷேகம் கடந்த வருடம் இடம்பெற்றதாகவும் இவ்வருடம் இரதோற்சவம் இடம்பெறுமென ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்திருந்தும் இம்முறையும் இரதோற்சவம் நடத்தப்படவில்லை என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர்.

இதேவேளை, இரதோற்சவம் நடத்தப்படுவதில் தங்களுக்கு எவ்வித எதிர்ப்புமில்லை எனவும் எதிர்வரும் காலங்களில் இரதோற்சவத்தை நடத்த ஆயத்தங்களை மேற்கொண்டு வருவதாகவும் ஆலயத்தின் தர்மகர்த்தா தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X