Princiya Dixci / 2015 ஜூன் 26 , மு.ப. 10:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் நகரில் வதியும் ஏழை குடும்பத்தினர் புனித ரமழான் நோன்பை சிறப்பாக அனுஷ்டிக்கும் நோக்கில் புத்தளம் ஆத்மீக ஒருமைப்பாட்டு நிலையத்தினால் உலர் உணவு பொதிகளை வழங்கி வைக்கும் நிகழ்வு, வெள்ளிக்கிழமை (26) இடம்பெற்றது.
புத்தளம் போல்ஸ் வீதியில் அமையப்பெற்றுள்ள ஆத்மீக ஒருமைப்பாட்டு நிலைய காரியாலயத்தில் வைத்து இந்த உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
புத்தளம் ஆத்மீக ஒருமைப்பாட்டு நிலையம் ஐந்தாவது வருடமாக வழங்கும் இந்த உலர் உணவு பொதிகளை இவ்வருடம் சுமார் 700 ஏழை குடும்பத்தினர் பெற்றுக்கொண்டனர்.
புத்தளம் ஆத்மீக ஒருமைப்பாட்டு நிலையத்தின் தலைவர் அஷ்ஷெய்க் எச்.அப்துல் நாசர் அவர்களின் வழிகாட்டலில் நடைபெற்ற இந்த உலர் உணவு பொதிகளை வழங்கி வைக்கும் நிகழ்வில் அஷ்ஷெய்க் எம்.எம். ரிபாஸ், அஷ்ஷெய்க் நசூர்டீன், அஷ்ஷெய்க் எம்.ரொஷான் ஆகியோர் தெரிவு செய்யப்பட்ட ஏழை குடும்பத்தினருக்கு இந்த உலர் உணவு பொதிகளை கையளித்தனர்.



54 minute ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
4 hours ago
4 hours ago