Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Thipaan / 2015 ஜூன் 30 , மு.ப. 05:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தளம், கருவலகஸ்வௌ வன பாதுகாப்புத் திணைக்கள அதிகாரி அலுவலகத்தை கல்லடி பிரதேச மக்கள், திங்கட்கிழமை(29) முற்றுகையிட முயற்சித்தனர்.
புத்தளம் மாவட்டத்தின் கல்லடிப் பகுதியில் அடிக்கடி காட்டு யானைகளின் தாக்குதல் இடம்பெறுவதன் காரணமாக, மனித உயிர்கள் இழக்கப்படுவதாகவும் இதற்கான நிரந்தர தீர்வினை வன பாதுகாப்புத் தினைக்களம் பெற்றுத்தர வேண்டுமெனவும் தெரிவித்தே கல்லடி பிரதேச மக்கள் முற்றுகையிட முயற்சித்தனர்.
இதன்போது, அவ்அலுவலகத்தை மக்கள் முற்றுகையிட முயற்சித்தபோது அங்கு விரைந்த பொலிஸார் முற்றுகையைத் தடுத்ததுடன் அவ்வலுவலக அதிகாரியைச் சந்திக்க நடவடிக்கை எடுத்தனர்.
மக்கள் கூடி நின்ற இடத்துக்கு வருகை தந்த வன வளத் திணைக்கள அதிகாரி, அடுத்த மாதம் 04 ஆம் திகதிக்கு முன்னர் மின்சார வேலிகளை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தையடுத்து மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
5 hours ago