Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Thipaan / 2015 ஜூன் 30 , மு.ப. 05:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
பொலன்னறுவை மாவட்டம், மன்னம்பிட்டி மஹாவலி கங்கைக்கு அருகில் உள்ள முருகன் ஆலயத்தைப் புனரமைக்கும் பணிகள் பற்றிய கலந்துரையாடல் பொலன்னறுவை மாவட்ட அரசாங்க அதிபர் எஸ். சேனநாயக்க தலைமையில் திங்கட்கிழமை(29) இடம்பெற்றது.
மேற்படி ஆலயத்தின் சுற்றாடல், வருடாவருடம் மகாவலி கங்கையின் வெள்ளப் பெருக்கு காலங்களில் மண்ணரிப்புக் உட்படுதல், தூர்ந்து போய் காடு மண்டிக் கிடக்கும் ஆலய சுற்றாடலை சிரமதானத்தின் மூலம் துப்புரவு செய்தல், ஆலயத்துக்குச் செல்லும் கிறவல் பாதை புதிதாக செப்பனிடப்பட வேண்டியதன் அவசியம், ஆலய புனர்நிர்மாணப் பணிகள், ஆலய நிர்வாக நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
சிங்கள, தமிழ் மக்களின் ஆன்மீக ஒன்று கூடல் தலமாக இந்த கங்கைக் கோயில் விளங்கி வருகின்றது.
திம்புலாகல பிரதேசத்தில் வாழும் தமிழ் சிங்கள மக்களின் இன ஐக்கியத்துக்கூடாக சமய நல்லிணக்கத்தையும் சமூக சகவாழ்வையும் வளர்க்க விருப்பதாக திம்புலாகலை பிரதேச செயலாளர் சசிதேவி ஜலதீபன் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் திம்புலாகலை பிரதேச செயலாளர் சசிதேவி ஜலதீபன், மஹாவலி சூழல் சுற்றாடல் இணைப்புச் செயலாளர் மஹிந்த ரட்னாயக்க, தமன்கடுவை பிரதேச சபைத் தவிசாளர் புஸ்பகுமார ரணசிங்ஹ, திம்புலாகலை பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தர் ஏ. லெவ்விதன் உள்ளிட்ட அதிகாரிகளும் ஆலயங்களின் குருக்களும், இந்து, பௌத்த மக்களும் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
5 hours ago