2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

கைகலப்பில் பொலிஸ் உத்தியோகத்தர் காயம்

Thipaan   / 2015 ஜூன் 30 , மு.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-முஹம்மது முஸப்பிர்

சிலாபம் முன்னேஸ்வரம் பிரதேசத்தில் திங்கட்கிழமை(29) இரவு 11 மணியளவில் இடம்பெற்ற கைகலப்பில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.

முன்னேஸ்வரம் பிரதேசத்தில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றின் போதே இந்தக் கைகலப்பு இடம்பெற்றுள்ளதுடன் இதில் சிலாபம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே காயமடைந்துள்ளார்.

பாதுகாப்பு பணிக்காக நியமிக்கப்பட்டிருந்த குறித்த பொலிஸ் உத்தியோகத்தரின் கைவிரல் ஒன்றினை, மதுபோதையில் வந்த நபர் ஒருவர் கடித்து காயப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

இதன் பின்னர் அங்கு இடம்பெற்ற கைகலப்பில் பொலிஸ் உத்தியோகத்தரின் கைவிரலைக் கடித்த நபரும் காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிலாபம் பொலிஸார் இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X