2025 மே 21, புதன்கிழமை

400 நீர் இறைக்கும் இயந்திரங்கள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2013 மே 15 , மு.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


எம்.என்.எம்.ஹிஜாஸ்  


புத்தளம்; மாவட்டத்தில்; குறைந்த வருமானம் பெரும் மக்களின் நலன்கருதி 400 நீர் இறைக்கும் இயந்திரங்கள் மற்றும் 19 கிராம அபிவிருத்தி சங்கங்களுக்கு கணினிகள் என்பன வழங்கும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை நடைப்பெற்றது.

இந்நிகழ்வில், புத்தளம் நகர சபைத் தலைவர் கே.ஏ.பாயிஸ் கலந்துகொண்டு மேற்படி உபகரணங்களை வழங்கி வைத்தார்.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சியின் நிதி ஒதுக்கீட்டில் இவ் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இங்கு உரையாற்றிய புத்தளம் நகர சபைத் தலைவர் கே.ஏ.பாயிஸ்,

'விமான நிலையங்கள், வீதிகள் மாத்திரமே அமைக்கப்படுகின்றது. ஆனால் மக்களின் வாழ்வாதாரத்தினை அதிகரிக்க அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று எதிர்கட்சியினர் குற்றம் சுமத்துகின்றனர்

இவ்வாறு குற்றம் சுமத்துவர்கள் ஏழை மக்களின் பொருளாதார மட்டத்தினை அதிகரிக்க இந்த அரசாங்கம் எவ்வாறான நடவடிக்கைகளினை முன்னெடுத்து வருகின்றது என்பதினை இவ்வாறான நிகழ்வினை வந்து பார்த்தால் அறிந்து கொள்ள முடியும்' என தெரவித்தார்.

இந்நிகழ்வில் வடமேல் மாகாண சபை உறுப்பினர் சிந்தக மாயாதுக்க, பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் புத்தளம் மாவட்ட திட்ட பணிப்பாளர் எஸ்.கே.வசந்த மற்றும் பலர் கலந்துகொண்டனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X