2025 ஒக்டோபர் 29, புதன்கிழமை

அடிக்கல் நாட்டும் நிகழ்வு

Princiya Dixci   / 2016 நவம்பர் 15 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்

புத்தளம், மதவாக்குளம் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இருமாடி வகுப்பறைக் கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, நேற்றுத்  திங்கட்கிழமை வைபவரீதியாக நடைபெற்றது.

வடமேல் மாகாண சபை உறுப்பினர் என்.டி.எம்.தாஹிர், முன்னாள் ஆனமடுவ பிரதேச சபை உறுப்பினர் முஹம்மட் ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்க, வடமேல் மாகாண கல்வி அமைச்சு குறித்த இருமாடிக் கட்டடத்துக்காக 56 இலட்சம் ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளது.

பாடசாலை அதிபர் முஹம்மது பஷீர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மாகாண சபைகள், உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் பியங்கர ஜயரத்ன, வடமேல் மாகாண கல்வி அமைச்சர் சந்தியா ராஜபக்ஷ, வடமேல் மாகாண சபை உறுப்பினர் என்.டி.எம்.தாஹிர், ஆனமடுவ பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் முஹம்மட் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X