2025 ஒக்டோபர் 29, புதன்கிழமை

அடிக்கல் நாட்டி வைப்பு

Princiya Dixci   / 2016 நவம்பர் 18 , மு.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்

புத்தளம், கரைத்தீவு முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் புதிய வகுப்பறைக் கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, இன்று வெள்ளிக்கிழமை (18) காலை நடைபெற்றது.

பாடசாலை அதிபர் எம்.நயீமுல்லாஹ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், வடமேல் மாகாண சபை உறுப்பினர் என்.டி.எம்.தாஹிர் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டதுடன், முன்னாள் வன்னாத்தவில்லு பிரதேச சபைத் தலைவர் அசனா மரைக்கார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

குறித்த பாடசாலையில் மிக நீண்ட காலமாக  இடப்பற்றாக்குறை காணப்பட்டு வருகிறது.

இதனால், கற்றல் மற்றும் கற்பித்தல் செயற்பாடுகளை மேற்கொள்வதில் ஆசிரியர்களும் மாணவர்களும் பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

எனவே, குறித்த பாடசாலைக்கு புதிய வகுப்பறைக் கட்டடமொன்றை பெற்றுக்கொடுக்குமாறு வடமேல் மாகாண சபை உறுப்பினர் என்.டி.எம்.தாஹிர், முன்னாள் வன்னாத்தவில்லுப் பிரதேசசபைத் தலைவர் அசனா மரைக்கார் ஆகியோர், வடமேல் மாகாண கல்வி அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

இவ் இருவரும், மாகாண கல்வி அமைச்சரிடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க,  வடமேல் மாகாண கல்வி அமைச்சு, 50 இலட்சம் ரூபாவை ஒதுக்கீட்டு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X