2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

அடிக்கல் நாட்டுதல்

எம்.யூ.எம். சனூன்   / 2017 ஓகஸ்ட் 01 , பி.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

புத்தளம் நகர சபையின் முன்னாள் தலைவர் .கே.ஏ.பாயிஸின் எண்ணத்தில் உதயமான, புத்தளம் நகரின் நீண்ட நாள் கனவாக இருந்த அல்பா வர்த்தக மையத்துக்கான அடிக்கல் நாட்டும் விழா, அல்பா வர்த்தக தொகுதி மைதானத்தில், எதிர்வரும் 3ஆம் திகதி காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது.

 

வடமேல் மாகாண முதலைமைச்சர் தர்மசிறி தசநாயக்கவின் தலைமையில் இது நடைபெறவுள்ளது.  

புத்தளம் நகர சபையின் செயலாளர் எம்.எம். நந்தன சோமதிலகவின் அழைப்பின் பேரில், புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண அமைச்சர்கள், மாகாண உறுப்பினர்கள், புத்தளம் நகர சபையின் முன்னாள் தலைவர் கே.ஏ.பாயிஸ், முன்னாள் உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன், வட மேல் மாகாண சபை பிரதான செயலாளர், முதலமைச்சின் செயலாளர், உள்ளூராட்சி மன்றங்களின் ஆணையாளர், புத்தளம் மாவட்ட செயலாளர், புத்தளம் பிரதேச செயலாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்  உட்பட அரச உத்தியோகத்தர்களின் பங்குபற்றுதலுடன், இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X