2025 மே 05, திங்கட்கிழமை

ஆங்கில மொழி மூலப் பேச்சுப் போட்டியில் தேசிய ரீதியில் முதலிடம்

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 20 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம்.சனூன்

நீல பசுமை யுகத்தை மாணவர்கள் மத்தியில் பிரபல்யப்படுத்தும் நோக்கில் அரசாங்கத்தினால் நடத்தப்பட்ட ஆங்கில மொழி மூலமான பேச்சுப் போட்டியில் புத்தளம் பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரி மாணவி ராசிக் பரீத் ரப்அத்ஆரா, தேசிய ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார்.

பரிசளிப்பு நிகழ்வுகள், பண்டாரநாயக்க ஞாபகர்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை (18) இடம்பெற்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சுற்றாடலோடு  சம்பந்தப்பட்ட  பல வெளிநாட்டு பிரமுகர்கள் பலரும் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்தத் தேசிய மட்டப் போட்டியானது, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைமையக கேட்போர் கூடத்தில் அண்மையில் இடம்பெற்றது.

இப்போட்டியில் ஆங்கில மொழி மூலம் 10 மாணவர்கள் போட்டியிட்டதில், ராசிக் பரீத் ரப்அத் ஆரா முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

நீல பசுமை யுகம் பற்றி மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் 10ஆம் மற்றும் 11ஆம் ஆண்டு மாணவர்கள் மத்தியில் கல்வி வலய மட்டத்திலிருந்து சகல மொழி மூலம் இந்த போட்டிதனை அரசு நடைமுறைப்படுத்தியிருந்தது.

இதில் ஆங்கில மொழி மூலம் கலந்துகொண்ட ராசிக் பரீத் ரப்அத் ஆரா,  புத்தளம் வலய மட்டத்தில் முதலிடத்தையும், மாகாண மட்டத்தில் முதலிடத்தையும் பெற்று தேசிய போட்டிக்குத் தெரிவாகி அங்கும் முதலிடம் பெற்றுள்ளார்.

புத்தளம் பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியில் தரம் 11 இல் கல்வி பயிலும் ராசிக் பரீத் ரப்அத் ஆரா ஒரு சிறந்த ஆங்கில மொழி அறிவிப்பாளர் ஆவார். இவர் புத்தளம் மூன்றாம் குறுக்குத் தெருவில் வதியும் ராசிக் பரீத் பாயிஸா தம்பதிகளின் சிரேஷ்டப் புதல்வி ஆவார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X