2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

ஆனமடு தொகுதியில் வீதி அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்

Princiya Dixci   / 2017 மார்ச் 29 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

முஹம்மது முஸப்பிர்

திறன் அபிவிருத்தி  மற்றும் தொழிற்பயிற்சி இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவின் ஏற்பாட்டில், ஆனமடு தோனிகல சந்தியிலிருந்து ஊரியாவ இறுதி வரையிலான வீதியை காபட் பாதையாக அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம் நேற்றுச் செவ்வாய்க்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரும் நாடாளுமன்றச் சபை முதல்வருமான லக்ஷ்மன் கிரியெல்ல, பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, இந்த வீதி அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைத்தார். 

சுமார் எட்டு கோடி நாற்பது இலட்சம் ரூபாய் செலவில் இந்த வீதி காபட் வீதியாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

இதேவேளை, ஆனமடு தேர்தல் தொகுதிக்குட்பட்ட நவகத்தேகமவிலிருந்து கருவலகஸ்வெவ வரையிலான 19 கிலோ மீற்றர் தூரத்தைக் கொண்ட வீதியும், நவகத்தேகமவிலிருந்து இங்கினிமிட்டி வரையிலான ஐந்து கிலோ மீற்றர் தூரத்தைக் கொண்ட வீதியும் காபட் வீதியாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

இவ்வீதிகளின் அபிவிருத்திப் பணிகளும் அமைச்சர் லக்ஷமன் கிரியெல்லவினால் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில், திறன் அபிவிருத்தி  மற்றும் தொழிற்பயிற்சி இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகள், அரச உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X