2025 மே 05, திங்கட்கிழமை

ஆழம்வில்லு - கரைத்தீவு வீதி புனரமைப்புக்கு நிதியொதுக்கீடு

Princiya Dixci   / 2016 நவம்பர் 15 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்

புத்தளம் மாவட்டத்தின் வாண்ணாத்தவில்லுப் பிரதேச சபைக்குட்பட்ட ஆழம்வில்லு - கரைத்தீவு பிரதான வீதி காபட் வீதியாகப் புனரமைக்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ், இன்று செவ்வாய்க்கிழமை (15) தெரிவித்தார்.

இதுபற்றி அவர் மேலும் தெரிவித்ததாவது,

'கடந்த ஆட்சிக்காலத்தில் குறித்த வீதியை புனரமைப்புச் செய்யாது வேண்டுமென்றே புறக்கணித்து வந்தனர். எனினும், குறித்த வீதியைப் புனரமைத்துத் தருமாறு முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமிடம் வேண்டுகோள் விடுத்திருந்தேன்.

'என்னுடைய வேண்டுகோளுக்கிணங்க குறித்த வீதியைப் புனரமைக்க நகர திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சின் 120 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீட்டில், இந்த விதி காபட் விதியாகப் புனரமைக்கப்படவுள்ளது' என்றார்.

இதேவேளை, புத்தளம் நகரில் புனரமைக்கப்பட்டு இடைநிறுத்தப்பட்டுள்ள பல அபிவிருத்திப் பணிகளும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சின் இந்த வருட மற்றும் அடுத்த வருட நிதியொதுக்கீட்டில் புனரமைக்கப்படவுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X