Princiya Dixci / 2017 மே 14 , மு.ப. 11:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஸீன் ரஸ்மின், முஹம்மது முஸப்பிர்
கற்பிட்டி மற்றும் சிலாபம் ஆகிய பிரதேசங்களில், சனிக்கிழமை இடம்பெற்ற இரு விபத்துகளில், இளைஞர்கள் இருவர் பலியாகியுள்ளனரென, பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விரு விபத்துகள் குறித்தும் தெரியவருவதாவது,
கற்பிட்டி, குறிஞ்சிப்பிட்டிப் பகுதியை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்ற 24 வயதுடைய இளைஞன், மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்துள்ளமையால், வீதியோரத்தில் நின்ற மரமொன்றில் மோதி விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.
கற்பிட்டி, கண்டல்குழி குடாவ பிரதேசத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி அந்தோனிலாகே துஷான் பியங்க எனும் இளைஞரே, இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் கடுமையான காயங்களுக்குள்ளான குறித்த இளைஞர், கற்பிட்டி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக புத்தளம் தள வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ள போதிலும், அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளாரென, கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, சிலாபம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கணுக்கெட்டி பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில், மரதன் குளம் காக்கப்பள்ளி பிரதேசத்தைச் சேர்ந்த கே. எம். அமில பிரசாத் (வயது 29) எனும் இளைஞன் உயிரிழந்துள்ளார்.
கணுக்கெட்டிய தொரகடவெலவத்தை உள் வீதியொன்றில் தொரகடவெலவத்தை திசையில் பயணித்த உழவு இயந்திரம் ஒன்றுடன், எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதியே, இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக, சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவருடன் உழவு இயந்திரத்தின் சாரதியும் பலத்த காயங்களுக்கு உள்ளாகி, சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.
சடலம், பிரேத பரிசோதனைக்காக சிலாபம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இவ்விரு விபத்துகள் தொடர்பிலும், கற்பிட்டி, சிலாபம் பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
15 minute ago
18 minute ago
36 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
18 minute ago
36 minute ago
43 minute ago