2025 மே 05, திங்கட்கிழமை

இளைஞர் மாநாடு

Niroshini   / 2016 ஒக்டோபர் 02 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

ஐக்கிய தேசியக் கட்சியின் புத்தளம் தொகுதிக்கான இளைஞர் மாநாடு, நேற்று சனிக்கிழமை புத்தளம் நகர மண்டபத்தில் இடம்பெற்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் புத்தளம் தொகுதி பிரதான அமைப்பாளரும் முன்னாள் புத்தளம் நகர சபை தலைவருமான எம்.என்.எம்.நஸ்மியின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய இளைஞர் முன்னணியின் செயலாளர் தாரக நாணயக்கார பிரதம அதிதியாகவும் வடமேல் மாகாண சபையின் ஐ.தே.க உறுப்பினரும் தேசிய இளைஞர் முன்னணியின் புத்தளம் மாவட்ட செயலாளருமான சித்ரால் பெர்ணான்டோ உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

புத்தளம் தொகுதியில் எதிர்காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியை வலுப்படுத்துவதுடன், இளைஞர்-யுவதிகளுக்கு தொழில்வாய்ப்புக்களை பெற்றுக்கொடுப்பது மாத்திரமின்றி, எதிர்காலங்களில் இளைஞர்களை கட்சிக்குள் உள்வாங்கி பிரதேச அமைப்பாளர்கள் ஊடாக ஒவ்வொரு பிரதேசங்களிலும் இளைஞர் அமைப்புக்களை உருவாக்கப்படவுள்ளன.

இவ்வாறு உருவாக்கப்படவுள்ள இளைஞர் அமைப்புக்கள் ஊடாக எதிர்காலங்களில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புக்கள், பிரதேசங்களின் அபிவிருத்திப் பணிகள் என்பவற்றை முன்னெடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை, புத்தளம் தொகுதியிலுள்ள பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கும் இதன்போது அதிதிகளினால் விளையாட்டு உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X