2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

எரிபொருள் நிரப்பு நிலையங்கள் புனரமைப்பு

Princiya Dixci   / 2017 மே 02 , மு.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்

புத்தளம், கற்பிட்டி பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்துக்குச் சொந்தமான இரண்டு எரிபொருள் நிரப்பு நிலையங்களை நவீன வசதிகளுடன் புனரமைப்பதற்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைசச்ருமான ரிஷாட் பதியுதீன் நடவடிக்கை எடுத்துள்ளாரென, கற்பிட்டி பலநோக்கு கூட்டுறவுச் சங்கத் தலைவர் ஏ.சி.எம்.சலாஹூதீன் இன்று (02) தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“எமது கூட்டுறவு சங்கத்துக்குச் சொந்தமான கற்பிட்டியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தற்போது மண்ணண்ணெய் மாத்திரம் விற்பனை செய்யப்படுகிறது.

“எனினும், மிக நிண்ட காலமாக குறித்த எரிபொருள் நிரப்பு நிலையம் புனரமைக்கப்படாது இருந்த கற்பிட்டி எரிபொருள் நிரப்பு நிலையத்தை நவீன வசதிகளுடன் புனரமைத்து, பெற்றோல் மற்றும் டீசல் என்பனவற்றையும் கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

“அத்துடன், ஏத்தாளைப் பிரதேசத்தில் தற்போது பாவனையிலுள்ள சங்கத்துக்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்தையும் நவீன மயப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

“குறித்த இரண்டு எரிபொருள் நிரப்பு நிலையங்களையும் புனரமைத்து, தேவையான வசதிகளையும் பெற்றுக்கொடுக்குமாறு, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவவியிடம் கோரிக்கையொன்றை முன்வைத்தோம்.

“எமது கோரிக்கையின் அடிப்படையில், சங்கத்துக்குச் சொந்தமான குறித்த இரண்டு எரிபொருள் நிரப்பு நிலையத்தையும் புனரமைக்க வேண்டியதன் அவசியம் பற்றி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவவி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனிடம் தெளிவுபடுத்தியுள்ளார்.

“இதனையடுத்தே, குறித்த இரண்டு எரிபொருள் நிரப்பு நிலையங்களையும் சகல வசதிகளுடன் விரைவில் புனரமைத்துக் கொடுப்பதாக, அமைச்சர் வாக்குறுதியளித்தார். அதற்கான பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X