2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

ஐந்து கிலோகிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது

Gavitha   / 2016 நவம்பர் 21 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

முஹம்மது முஸப்பிர்

புத்தளம், பாலாவி பிரதேசத்தில், ஐந்து கிலோகிராம் கஞ்சாவை தன்வசம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில், சந்தேக நபரொருவரை, நேற்று ஞாயிற்றுக்கிழமை (21) கைது செய்ததாக, புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளம் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலக விஷேட பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, மேற்கொள்ளப்பட்ட சுற்றவளைப்பு நடவடிக்கையின் போதே, சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்பிட்டி தலவில பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய சந்தேக நபரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X