2025 ஒக்டோபர் 29, புதன்கிழமை

கிராமிய குடிநீர் திட்டம் ஆரம்பித்து வைப்பு

Princiya Dixci   / 2016 நவம்பர் 12 , மு.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

கற்பிட்டி, முசல்பிட்டிப் பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள கிராமிய குடிநீர் திட்டத்துக்கான ஆரம்ப வேலைகள், நேற்று வெள்ளிக்கிழமை (11), வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நகரத் திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு குறித்த திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.

வடமேல் மாகாணசபை உறுப்பினர் எஸ்.எச்.எம். நியாஸின் வேண்டுகோளுக்கிணங்க நகரத் திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சினூடாக இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந் நிகழ்வில் வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ், வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முத்தலிப் பாவா பாருக், அமைச்சின் அதிகாரிகள் உட்பட மு.கா பிரதேச அமைப்பாளர்கள்  எனப் பலரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X