Kogilavani / 2017 மே 05 , மு.ப. 07:13 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.யூ.எம். சனூன், ரஸீன் ரஸ்மின்
“புத்தளம் பிரதேசத்தில் நிலவும் குழாய் நீர் பிரச்சினைகளுக்கு, இன்னும் ஐந்து நாட்களுக்குள் தீர்வு கிட்டும்” என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் உறுதியளித்துள்ளார்.
புத்தளம் பிரதேசத்திலுள்ள குழாய் நீர் பாவனையாளர்களின் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல், வியாழக்கிழமை (04) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில், அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போதே அவர், இந்த உறுதிமொழியை வழங்கினார்.
குழாய் நீர் பாவனையாளர்களுக்கு போதியளவு நீர் கிடைக்காமை, அடிக்கடி அமுல்படுத்தப்படும் நீர்வெட்டு, பின்தங்கிய பிரதேசங்களில் நீர் வழங்குவதற்கு போதியளவு பௌசர் வண்டிகள் இல்லாமை போன்ற பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக இங்கு ஆராயப்பட்டன.
இக்கலந்துரையாடலில் வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம். நியாஸ், முன்னாள் பிரதியமைச்சரும், புத்தளம் நகர சபையின் முன்னாள் தலைவருமான கே.ஏ. பாயிஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
1 hours ago
17 Dec 2025
17 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
17 Dec 2025
17 Dec 2025