2025 ஒக்டோபர் 29, புதன்கிழமை

கசிப்புக் காய்ச்சியோர் கைது

Niroshini   / 2017 ஜனவரி 29 , மு.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-முஹம்மது முஸப்பிர்

ஆனமடு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்கட்டிக்குளம் பிரதேசத்தில், கசிப்புக் காய்ச்சிய மூவரை, ஆனமடு பொலிஸார், சனிக்கிழமை (28) கைது செய்துள்ளனர்.

கைதுசெய்ப்பட்டவர்களிடமிருந்து 720 பரல் கசிப்பு, 9,288 பரல் கோடா, செப்பு கம்பிச் சுருள்கள் நான்கு, வாயு அடுப்பு ஒன்று, வாயு சிலிண்டர் ஒன்று, 50 கிலோகிராம் சீனி, லொறி ஒன்று என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதுசெய்யப்பட்டவர்கள் 21, 38 மற்றும் 56 வயதுகளையுடைய கந்தானை, அங்குணபில பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X