Niroshini / 2016 ஒக்டோபர் 03 , மு.ப. 09:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்
புத்தளம் - பாலவி மல்லிகாபுரம் பள்ளி நிருவாக சபையினருடன் இணைந்து முஹஜிரீன் பாலர் பாடசாலை ஏற்பாடு செய்த கண்காட்சியொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை பாலர் பாடசாலைக் கட்டடத்தில் இடம்பெற்றது.
முஹஜிரீன் பாலர் பாடசாலை ஆசிரியை பாத்திமா ஹமீதாவின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவவி பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு குறித்த கண்காட்சிக் கூடத்தை திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட பிரதான அமைப்பாளர் அலிசப்ரி, அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் யாழ். மற்றும் கிளிநொச்சி இணைப்பாளர் ரிபாஸ் நஸீர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது, அங்கு இடம்பெற்ற போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


5 hours ago
8 hours ago
18 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
18 Mar 2026