Princiya Dixci / 2016 ஒக்டோபர் 25 , மு.ப. 07:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரஸீன் ரஸ்மின்
புத்தளம் மாவட்டத்தின் 'பீ' தரத்திலுள்ள கற்பிட்டி மாவட்ட வைத்தியசாலையை 'ஏ' தரத்துக்குக் கொண்டு வருவது அவசியம் குறித்து, புத்தளம் நகர சபை முன்னாள் உறுப்பினர் எஸ்.ஆர்.எம்.முஹ்சி வலியுறுத்தியுள்ளார்.
கற்பிட்டி மாவட்ட வைத்தியசாலையில் நாளாந்தம் 350 இற்கும் அதிகமானோர், வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன், மாதாந்தம் 200 முதல் 250 வரையிலான பிள்ளைப் பேறுகள் இடம்பெறுகின்றன.
அத்தோடு, மாவட்ட வைத்தியசாலையாக இருக்கும் குறித்த வைத்தியசாலைக்கு 18 தாதியர்கள் தேவைப்படுகின்ற போதும் 06 பேரே பெரிதும் சிரமத்துக்கு மத்தியில் கடமையாற்றி வருகின்றனர்.
நோயாளர்கள் தங்குவதற்கான வார்ட்களுக்கும் பற்றாக்குறை காணப்படுகின்றன. இதனால் நோயாளர்கள் பெரிதும் சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
மேலும், மிகவும் பழமை வாய்ந்த இதன் கட்டடங்களை எதிர்காலங்களில் பயன்படுத்த முடியாத நிலை காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.
எனவே, பௌதீக வளங்கள் மற்றும் மனித வளங்கள் என கற்பிட்டி மாவட்ட வைத்தியசாலையில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து, 'பி' தரத்திலிருந்து 'ஏ' தரத்துக்குத் தரமுயரத்த வேண்டுமெனவும் அவர்; தெரிவித்தார்.
5 minute ago
10 minute ago
23 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
10 minute ago
23 minute ago