Editorial / 2017 ஜூன் 22 , பி.ப. 05:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருமணம் முடித்த பெண்ணொருவரை பலவந்தப்படுத்தி, கூட்டாக வன்புணர்ந்த சம்பவத்தில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட இருவருக்கு, தலா எட்டு வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து, புத்தளம் மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.டி.டெப் தீர்ப்பளித்துள்ளார்.
அதற்கு மேலதிகமாக, ஒருவர் 25 ஆயிரம் ரூபாய் படி 50 ஆயிரம் ரூபாயை, பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கு நட்டஈடாக வழங்க வேண்டும் என்றும் அப்படி வழங்காவிடின், மேலும் இரண்டு வருடங்கள் சிறைத்தண்டனையுடன் தலா 5 ஆயிரம் ரூபாய் தண்டம் செலுத்த நேரிடும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
திருமணம் முடித்த இரண்டு பேருக்கே, இவ்வாறு தண்டனை வழங்கப்பட்டுள்ளது..
2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11ஆம் திகதியிலோ அல்லது அதற்கு அண்மித்த திகதியொன்றிலோ இந்த கூட்டு வன்புணர்வு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக, இவ்விருவரும் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டனர்.
அவ்விருவருக்கு எதிராகவும், மற்றுமொருவருக்கு எதிராகவும் அதிக்குற்றச்சாட்டுப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதிலொருவர் வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ளார். அவருக்கு, திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
1 hours ago
5 hours ago
18 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
18 Mar 2026