Editorial / 2017 ஜூன் 18 , பி.ப. 03:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின், முஹம்மது முஸப்பிர்
சிலாபம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமாரகட்டுவப் பிரதேசத்தில், கூரிய ஆயுதமொன்றால் தாக்கி, அதே பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடைய ஒருவரைக் கொலை செய்த குற்றச்சாட்டில், இளைஞர் ஒருவரைக் கைதுசெய்துள்ளதாக, சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.
கொலை செய்யப்பட்டுள்ள நபர், தனது வீட்டில் தனிமையில் இருந்த நிலையிலே, சனிக்கிழமை இரவு, இவ்வாறு கூரிய ஆயுதமொன்றால் தாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.
இரண்டு நபர்களுக்கிடையில் இடம்பெற்ற வாக்குவாதமே பின்னர் கொலையில் முடிவடைந்துள்ளதாக, ஆரம்பகட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இக்கொலையுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில், அதே பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் ஒருவர், பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபரிடமிருந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்ட சிலாபம் பொலிஸார், விசாரணை நிறைவடைந்ததும் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தனர்.
2 hours ago
17 Dec 2025
17 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
17 Dec 2025
17 Dec 2025