2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஒருவர் கைது

முஹம்மது முஸப்பிர்   / 2017 ஜூன் 27 , பி.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

வீடுகளை உடைத்து பல்வேறு கொள்ளைச் சம்பவங்களை மேற்கொண்டதாகக் கூறப்படும் சந்தேகநபர் ஒருவர், முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கீரியங்கள்ளி பிரதேசத்தில் வைத்து, திங்கட்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளார் என, முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.

மாவத்தகம பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய இளைஞரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, குறித்த நபரால் திருடப்பட்டு, வேறு நபர்களுக்கு விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் 12 அலைபேசிகள், குறித்த சந்தேகநபரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர், பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்நபர், கடந்த வருடத்திலிருந்து இதுவரை, முந்தல் பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற வீடுகள் உடைப்பு மற்றும் ஏனைய கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகநத்தில் தேடப்பட்டு வந்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலையடுத்தே, மேற்படி சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவரை, புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கையை மேற்கொண்டு வரும் பொலிஸார், இது தொடர்பான மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X