2025 மே 05, திங்கட்கிழமை

சிறுமியை வன்புணர்ந்த நபருக்கு விளக்கமறியல்

Gavitha   / 2016 ஒக்டோபர் 15 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

முஹம்மது முஸப்பிர்

11 வயது மாணவியொருவரை அச்சுறுத்தி அவரை வன்புணர்வுக்குட்படுத்திய இரண்டு பிள்ளைகளின் தந்தையை, எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு புத்தளம் பதில் நீதவான் இன்று சனிக்கிழமை (15) உத்தரவிட்டுள்ளார்.

 வண்ணாத்திவில்லு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசமொன்றில் வைத்து இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில், சிறுமியின் அயல் வீட்டுக்காரரான இளம் குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தனது சகோதரிகளுடன் வீட்டில் தனிமையில் இருந்த சிறுமியை, கத்தியைக் காட்டி அச்சுறுத்தியே, சந்தேக நபர் சிறுமியை வன்புணர்வுக்குட்படுத்தியுள்ளார். சம்பவம் இடம்பெற்று சில நாட்களின் பின்னர் சம்பவம் தொடர்பில் குறித்த சிறுமி தனது பாடசாலை ஆசிரியையிடம் தெரிவித்ததையடுத்து, இது தொடர்பில் வண்ணாத்திவில்லு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு பின்னர் சந்தேக நபர் நேற்று வெள்ளிக்கிழமை (14) கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X