Princiya Dixci / 2016 நவம்பர் 21 , பி.ப. 01:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்
புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையில் சுற்று மதில் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, இன்று திங்கட்கிழமை (21) வைபவ ரீதியாக நடைபெற்றது.
பாடசாலை அதிபர் எஸ்.ஏ.சி.யா௯ப் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் புத்தள மாவட்ட அமைப்பாளர் ஏ.எம்.ஜௌபர் மரிக்கார், முன்னாள் புத்தளம் நகர சபை உறுப்பினரும் சாஹிரா தேசிய பாடசாலையின் உதவி அதிபருமான எஸ்.ஆர்.எம்.முஹ்சி, பாடசாலை அபிவிருத்திச் சங்கச் செயலாளர் ஜே.எம்.லிப்தி, ஸ்ரீ.மு.கா பிரதேச அமைப்பாளர் ஏ.எம்.அஸ்கீன் உட்பட ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
குறித்த பாடசாலைக்கு சுற்று மதில் அமைத்துக் கொடுக்குமாறு வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ், விளையாட்டுத்துறைப் பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீசிடம் வேண்டுகோள் விடுத்தார்.
குறித்த மாகாண சபை உறுப்பினரின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ், குறித்த பாடசாலையில் சுற்று மதில் அமைக்க 36 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025