Princiya Dixci / 2016 நவம்பர் 16 , மு.ப. 11:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம். செல்வராஜா
கதிர்காமம் புனித பூமியில் யாத்திரிகளிடம் கொள்ளை, வழிப்பறி, திருட்டு போன்ற சம்பவங்களில் ஈடுபட்ட இரு சிறுவர்களையும் மூன்று பெண்களையும், கதிர்காமப் பொலிஸார், நேற்றுச் செவ்வாய்க்கிழமையன்று (15) கைதுசெய்துள்ளனர்.
இவர்களை, திஸ்ஸமாராமை நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்செய்த போது, கைதுசெய்யப்பட்ட மூன்று பெண்களை, எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் திஸ்ஸமாராமை சிறுவர் பாதுகாப்பு, நன்னடத்தை நிலையத்தில் இரு சிறுவர்களையும் ஒப்படைக்குமாறு நீதவான்;, பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
இவர்கள் தொடர்பாக, யாத்திரிகர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற 22 முறைப்பாடுகளின் அடிப்படையிலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
14 minute ago
19 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
19 minute ago
32 minute ago