Niroshini / 2016 செப்டெம்பர் 23 , மு.ப. 07:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

-முஹம்மது முஸப்பிர்
கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக வீட்டிலிருந்து புதன்கிழமை(21), மாலை வெளியேறிச் சென்ற பெண் ஒருவர் தோட்டம் ஒன்றிலிருந்து நேற்று (21) சடலமாக மீட்கப்பட்டார்.
முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதுரங்குளி - செம்பட்டை பிரதேசத்தைச் சேர்ந்த எச்.சஜீவனி (வயது 44) எனும் நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.
இப்பெண் கடந்த புதன்கிழமை மாலை அருகில் உள்ள கடையில் பொருட்கள் வாங்குவதற்காக வீட்டிலிருந்து வெளியேறிச் சென்றுள்ளார். அவ்வாறு சென்றவர் அன்று இரவு வரையில் வீடு திரும்பாததையடுத்து, அப்பெண்ணின் மகள் இது தொடர்பில் முந்தல் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்நிலையிலேயே, குறித்தப் பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
5 hours ago
8 hours ago
18 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
18 Mar 2026