2025 மே 05, திங்கட்கிழமை

திருட்டு குற்றச்சாட்டில் ஒருவர் கைது

Princiya Dixci   / 2017 ஏப்ரல் 22 , மு.ப. 08:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்

நீர்கொழும்பு, கொச்சிக்கடைப் பிரதேசத்தில் திருட்டுச்சம்பவமொன்றில் தேடப்பட்டு வந்த சந்தேகநபரொருவர், நேற்றுக் கைதுசெய்யப்பட்டுள்ளார் என கொச்சிக்கடை பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர், ஹோடபிட்டி பங்கதெனிய பிரதேசத்தைச் சேர்ந்த24 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கொச்சிக்கடை பிரதேசத்திலுள்ள பெண்ணொருவர் தனது தங்கச் சங்கிலி திருடப்பட்டுள்ளதாக கொச்சிக்கடை பொலிஸ் நிலையத்தில் ஏக்கெனவே முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் தேடுப்பட்டு வந்த குறித்த சந்தேகநபரான இளைஞர், தலைமறைவாகியிருந்த நிலையிலேயே கொச்சிக்கடைப் பொலிஸார் நடத்திய தேடுதலில் நேற்றுக் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரான இளைஞனிடமிருந்து தங்கச்சங்கிலி, பென்டன் மற்றும் திருட்டுச் சம்பவத்திக்குப் பயன்படுத்தியாதகக் கூறப்படும் மோட்டார் சைக்கிளொன்றும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கொச்சிக்கடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X