2025 மே 05, திங்கட்கிழமை

தெங்குச் செய்கையாளர்களுக்கு விசேட செயலமர்வுகள்

எம்.யூ.எம். சனூன்   / 2017 ஜூன் 08 , பி.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம் அட்டவில்லு மற்றும் போதிராஜபுர கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட தெங்குப் பயிர்ச் செய்கையாளர்களுக்கான விசேட செயலமர்வுகள், குறித்த பிரதேசங்களின் சனசமூக நிலையங்களில், புதன்கிழமை (07) காலை நடைபெற்றன.

தென்னங்கன்றுகளை நடும் விதங்கள், நோய்த் தாக்கங்களிலிருந்து அவைகளைப் பாதுகாத்தல் மற்றும் வரட்சியான வானிலையில் மண்ணில் காணப்படும் ஈரலிப்பைப் பாதுகாத்தல் போன்ற விடயங்கள் தொடர்பாக, இங்கு விரிவாக விளக்கமளிக்கப்பட்டன.

புத்தளம் தெங்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.என்.எம். ஹிஜாஸ், இதில் பிரதான வளவாளராகக் கலந்துகொண்டார்.

வீட்டுத் தோட்டத் தெங்குப் பயிர் செய்கையாளர்களுக்கு, இதன்போது தலா இரு தென்னம்பிள்ளைகள் வீதம், மொத்தமாக 1,500 தென்னம்பிள்ளைகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X