2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

நியாயமான இழப்பீட்டைக் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Princiya Dixci   / 2016 நவம்பர் 22 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

துஷார தென்னகோன்

பொலன்னறுவை நகரத்தை அபிவிருத்தி செய்வதற்காக வயல் நிலங்களை ஒதுக்கியமையால், இந்நிலங்களுக்கான நியாயமான இழப்பீடுத் தொகையை வழங்க வேண்டும் எனக் கோரி, பொலன்னறுவை, கந்துருவெல விவசாயிகள், இன்று செவ்வாய்க்கிழமை (22) எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொலன்னறுவையில் மேற்கொள்ளப்படுகின்ற 'விழிப்பு' என்ற அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் கீழ், 47 குடும்பங்களைச் சேர்ந்தவர்களுடைய 60 ஏக்கர் நிலப்பரப்புக்கள் அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்
சுட்டிக்காட்டினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், சுமார் 100 பேர் பங்குபற்றியிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X