Princiya Dixci / 2016 டிசெம்பர் 26 , மு.ப. 07:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஸீன் ரஸ்மின்
புத்தளம், கல்லடியில் வீடொன்றில் தனது பெற்றோர்களுடன் வசித்த பெண்ணொருவரின் தலைப்பகுதியில் கடுமையாகத் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரை, நாளை 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு புத்தளம் மாவட்ட பதில் நீதவான் எம்.எம்.இக்பால் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த சனிக்கழமை இரவு குறித்த பெண் தனது பெற்றோர்களுடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது திடீரென வீட்டிற்குள் புகுந்த கும்பலொன்று, குறித்த பெண்ணை கடுமையாகத் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த தாக்குதல் சம்பவத்தினால் தலைப்பகுதியில் கடுமையாக காயங்களுக்குள்ளான நிலையில் படுகாயமடைந்த குறித்த பெண், புத்தளம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவரைக் கைதுசெய்த புத்தளம் பொலிஸார், தாக்குதலுக்குள்ளான பெண் வாக்குமூலமளிக்கும் நிலையில் இல்லை எனவும் தெரிவித்தனர்.
புத்தளம் தள வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் குறித்த பெண்ணிடமிருந்து வாக்குமூலம் பெறப்பட்டதன் பின்னரே, இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள முடியும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025