2025 ஒக்டோபர் 30, வியாழக்கிழமை

புத்தளத்தில் அதிநவீன கடற்கரை பூங்கா

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 20 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.யூ.எம். சனூன்

வடமேல் மாகாணத்திலேயே அதி நவீன கடற்கரை பூங்காவை புத்தளம் - கொழும்பு வீதியை அண்டிய கடற்கரையில் அமைக்கப்படுவதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

புத்தளம் நகரின் பொழுதுபோக்குத்திடலான கொழும்பு முகத்திடலுக்கு அருகாமையில் இந்த கடற்கரைப் பூங்கா அமைக்கப்படவுள்ளது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் ஏ.என்.எம். ஜெகுபர் மரிக்காரின் வேண்டுகோளின் பேரில் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம், இந்த கடற்கரைப் பூங்காவை அமைப்பதற்கென 5 கோடி ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X