2025 மே 05, திங்கட்கிழமை

புத்தளத்தில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 31 , மு.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின், எம்.எஸ்.முஸப்பிர், எம்.யூ.எம்.சனூன்

வடமாகாண முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டு ஒக்டோபர் மாதத்துடன் 26 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் 'கறுப்பு ஒக்டோபர் - 2016' எனும் கருப்பொருளில் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட புத்தளத்தில் வாழும் முஸ்லிம் சமூகம், நேற்று ஞாயிற்றுக்கிழமை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது தமது மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்துமாறும், தமது பிரச்சினைகளைக் கையாள்வதற்கென தனியான ஜனாதிபதி விசேட ஆணைக்குழுவொன்றை நியமிக்குமாறும் இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டது.

புத்தளம் நகர மண்டபத்துக்கு முன்னால் இடம்பெற்ற குறித்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவவி, நாடாளுமன்ற முன்னர் உறுப்பினர் டாக்டெர் எம்.ஐ.இல்யாஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தளம் அமைப்பாளர் அலிசப்ரி, முன்னாள் புத்தளம் நகர சபை உறுப்பினர் எஸ்.ஆர்.எம்.முஹ்சி, புத்தளம் இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லூரியின் விரிவுரையாளர் அஷ்ஷெய்க் எச்.எம்.மின்ஹாஜ் (இஸ்லாஹி) உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது வடபுல முஸ்லிம் மக்களின் இடப்பெயர்வு குறித்து புத்தளம் நகர மண்டபத்தில் விசேட சொற்பொழிவுகள் இடம்பெற்றதுடன்,  புத்தளம் இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லூரியின் விரிவுரையாளர் அஷ்ஷெய்க் எச்.எம்.மின்ஹாஜ் (இஸ்லாஹி) வடபுல முஸ்லிம் மக்களின் இடப்பெயர்வு மற்றும் மீள்குடியேற்றம் தொடர்பில் விசேட சொற்பொழிவாற்றினார்.

இதேவேளை, தமது சொந்த மண்ணில் மீள்குடியேற்றுவதற்கு நல்லாட்சி அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி கவனயீர்பு ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டு புத்தளத்தில் வாழும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான முஸ்லிம் மக்கள் குறித்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X