2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

புத்தளத்தில் சாதனைப் பெண்

Princiya Dixci   / 2017 ஏப்ரல் 09 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.யூ.எம். சனூன்

புத்தளம் சேஞ்ச் தொண்டு நிறுவனம் நடத்திய, புத்தளத்தில் வதியும் சிறந்த சாதனைப் பெண்களுக்கான தெரிவுப் போட்டியில், அதிகூடிய விருப்பு வாக்குகளைப் (823) பெற்று, புத்தளத்தின் ஜனரஞ்சக பெண்ணுக்கான விருதினை, புத்தளம் சுபியானி பாரூக் பெற்றுக்கொண்டுள்ளார்.

புத்தளத்தில் இலை, மறை காய்களாக பெண்கள் பல்வேறு துறைகளில் சாதனைகளை செய்திருக்கிறார்கள், செய்து கொண்டும் இருக்கிறார்கள். இவர்களை சமூகத்துக்கு முன்மாதிரிகளாக அடையாளம் காட்டி, ஏனையவர்களுக்கு ஊக்குவிப்பாக அமைவதற்காக, சர்வதேச மகளிர் தினத்தை​ முன்னிட்டு, இத்தேடல் முயற்சியினை புத்தளம் சேஞ்ச் தொண்டு நிறுவனம் நடாத்தியிருந்தது.

மொத்தமாக 27 பெண்கள் இந்த போட்டியில் பங்கேற்றனர். இது தவிர சமூக சேவை, கல்வி, அரசியல், சட்டம், ஊடகம், கலை இலக்கியம், பொருளியல் மற்றும் நிர்வாகம் போன்ற துறைகளில் சாதனை செய்த பெண்களும், இந்நிகழ்வில் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X