Princiya Dixci / 2016 ஒக்டோபர் 19 , மு.ப. 10:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஸீன் ரஸ்மின்
புத்தளம் தள வைத்தியசாலைக்குப் பொருத்தமான மின்பிறப்பாக்கியொன்றை பெற்றுக்கொடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மின்சாரத் தடை ஏற்படும் சந்தர்ப்பங்களில், வைத்தியசாலையிலுள்ள மின்பிறப்பாக்கி மூலமே வைத்தியசாலையின் மின்சாரத் தேவைகள் நிறைவேற்றப்படுவதுடன், ஏனைய நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எனினும், தற்போது மின்சாரம் நாளாந்தம் துண்டிக்கப்படுவதால் வைத்தியசாலையிலுள்ள மின்பிறப்பாக்கியின் தேவைகளும் அதிகரித்துள்ளன.
இதேவேளை, செவ்வாய்க்கிழமை, ஏற்பட்ட மின்சாரத் தடை காரணமாக குறித்த வைத்தியசாலையின் மின்பிறப்பாக்கியை இயக்க முற்பட்டபோது, அது சரியாக இயங்கவில்லை எனவும், ஒருசில மணி நேரங்களின் பின்னரே, அது திருத்தப்பட்டு, இயக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனால், சத்திர சிகிச்சைப் பிரிவு, இரத்த வங்கிப் பிரிவு உள்ளிட்ட பிரிவுகளின் செயற்பாடுகளை முன்னெடுப்பதிலும், அவசியத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதிலும் வைத்தியசாலை நிர்வாகம் பல சிரமங்களை எதிர்நோக்கியதாகவும் கூறப்படுகிறது.
எனவே, வைத்தியசாலை நடவடிக்கைகளுக்குத் தேவையான மின்பிறப்பாக்கியைப் பெற்றுக்கொடுப்பதற்கு, மாகாண சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
7 minute ago
12 minute ago
25 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
12 minute ago
25 minute ago