Princiya Dixci / 2016 ஒக்டோபர் 19 , மு.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஸீன் ரஸ்மின், எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் நகர சபைக்கு, நிரந்தர செயலாளர் ஒருவரை நியமிக்குமாறு, மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா, வடமேல் மாகாண முதலமைச்சர் தர்மசிரி தஸநாயக்க, வடமேல் மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பல்லாயிரக் கணக்கான மக்களைக் கொண்ட இந்த நகரத்தின் அடிப்படை வசதிகளைத் திறம்பட மக்களுக்கு பெற்றுக் கொடுப்பதில் முக்கிய பங்கு வகிப்பது நகர சபையாகும்.
புத்தளம் நகர சபையின் செயலாளராக கடமையாற்றிய நிசாந்தகுமார மாவத்தகம, பிரதேச சபைக்கு இடமாற்றப்பட்டமையை அடுத்து நகர சபையில் செயலாளருக்கு வெற்றிடம் காணப்பட்டு வருகிறது.
எனினும், இந்த நகர சபைக்கு கற்பிட்டி பிரதேச சபை செயலாளர் புத்தளம் நகர சபையின் பதில் செயலாளராக நியமிக்கப்படிருந்ததுடன், தற்போது வண்ணாத்திவில்லு உதவி பிரதேச செயலாளர் வாரத்தில் ஒரு நாட்களுக்கு பதில் செயலாளராக கடமையாற்றுகின்றார்.
இதனால் நகர சபை நிர்வாகச் செயற்பாடுகளை உரிய முறையில் முன்னெடுப்பதற்கும், அபிவிருத்தி வேலைகளைச் செய்வதற்கும் மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கும் நகர சபை உத்தியோகத்தர்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனவே, இதற்கு உடனடித் தீர்வாக புத்தளம் நகர சபையில் தற்போது கடமையாற்றுகின்ற பிரதான நிர்வாக உத்தியோகத்தரை, பதில் செயலாளராக நியமிப்பதன் மூலம் நிர்வாக செயற்பாடுகள், அபிவிருத்திப் பணிகள் என்பவற்றை உரிய முறையில் முன்னெடுக்க முடியும் எனவும் கூறப்படுகிறது.
இதேவேளை, குறித்த நகர சபைக்கு நிரந்தர செயலாளர் ஒருவர் தேவை என்கின்ற விடயத்தினை புத்தளம் நகர சபையின் முன்னாள் உறுப்பினரும், சமூக ஆர்வலருமான எஸ்.ஆர்.எம். முஹுசி வலியுறுத்தியுள்ளார்.
5 minute ago
10 minute ago
23 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
10 minute ago
23 minute ago