Gavitha / 2017 மார்ச் 27 , பி.ப. 03:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
முஹம்மது முஸப்பிர்
புத்தளம்-கொழும்பு பிரதான வீதியின் மதுரங்குளி செம்பட்டை பகுதியில், ஞாயிற்றுக்கிழமை மாலை (26) இடம்பெற்ற விபத்தில், சிலாபத்தைச் சேர்ந்த தம்பதியினரான எஸ்.சுந்தரலிங்கம் (வயது 48), பீ. நில்மினி பெர்னாண்டோ (வயது 45) ஆகிய இருவரும் பலியாகியுள்ளனர்.
புத்தளம் - கொழும்பு வீதியில் பயணித்துக் கொண்டிருந்த சொகுசுரக வானொன்று எதிரே பயணித்த முச்சக்கர வண்டியுடன் நேருக்கு நேர் மோதியே விபத்துக்குள்ளானது.
சிலாபத்திலிருந்து புத்தளத்தில் உள்ள உறவினர் வீட்டுக்குச் முச்சக்கரவண்டியில் பயணித்து கொண்டிருந்த இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
சம்பவத்தில் படுகாயமடைந்த இவ்விருவரும், அயலவர்களினால், புத்தளம் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அனுமதிக்கப்பட்ட போதிலும் அங்கு அவ்விருவரும் உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் முந்தல் பொலிஸார், வானின் சாரதியை கைதுசெய்து விசாரணைக்கு உட்படுத்தி வருவதுடன், மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
13 minute ago
16 minute ago
34 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
16 minute ago
34 minute ago
41 minute ago