2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

புதிய கட்டடத் தொகுதிகள் திறப்பு

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 15 , மு.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சிவாணி ஸ்ரீ

சப்ரகமுவ மாகாண சபையின் 14  மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ், வரகாபொல காமினி வித்தியாலத்தில் புதிதாக அமைக்கப்பட்ட இரண்டு மாடிக் கட்டடத் தொகுதி மற்றும் நூல் நிலையம், ஆய்வுகூடம் என்பன திங்கட்கிழமை (13) திறந்து வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத், சப்ரகமுவ மாகாண சபையின் உப தலைவர் உதயகாந்த குணதிலக்க, மாகாண சபை உறுப்பினர் லஷ்மன் கொடிகார ஆகியோர் கலந்து கொண்டனர்.   

கேட்போர் கூடம் ஒன்று அமைப்பதற்கும் சப்ரகமுவ மாகாண சபை 10 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X