Princiya Dixci / 2017 ஏப்ரல் 26 , மு.ப. 10:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்
தேசிய கல்விச் சேவை சங்கத்தின் புத்தளம் மாவட்டத்துக்கான தலைவராகவும் வடமேல் மாகாணத்துக்கான உப தலைவராகவும் புத்தளம் சாஹிரா தேசியப் பாடசாலையைச் சேர்ந்த ஆசிரியர் கலாநிதி எஸ்.ஆர்.எம்.ஆஸாத் நியமிக்கப்பட்டுள்ளார்.
தேசிய கல்விச் சேவை சங்கத்தின் உயர்மட்ட உறுப்பினர்களுடனான கலந்துரையாடலொன்று, மின்வலு மற்றும் மீள்புத்தாக்க சக்தி பிரதியமைச்சரும் தேசிய கல்வி சேவை சங்கத்தின் தலைவருமான அஜித் பி பெரேராவின் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போதே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
பிரதியமைச்சர் அஜித் பி பெரேரா, இவருக்கான நியமனக் கடிதத்தையும் வழங்கி வைத்தார்.
கலாநிதி எஸ்.ஆர்.எம்.ஆஸாத், ஐக்கிய தேசியக் கட்சியின் புத்தளம் தொகுதி பிரதான அமைப்பாளர் எம்.என்.எம்.நஸ்மியின் ஊடகச் செயலாளராகக் கடமையாற்றி வருவதுடன், ஓர் ஆசிரியர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
புத்தளம் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்கள் உள்ளக மற்றும் வெளி இடமாற்றங்கள் உட்பட கற்பித்தல் செயற்பாடுகளில் தாம் எதிர்நோக்கும் சகல பிரச்சினைகள் இருப்பின் உடனடியாகத் தொடர்புகொள்ளுமாறு, தேசிய கல்வி சேவை சங்கத்தின் புத்தளம் மாவட்ட தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர் கலாநிதி எஸ்.ஆர்.எம்.ஆஸாத் இதன்போது கேட்டுக்கொண்டார்.
43 minute ago
47 minute ago
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
47 minute ago
5 hours ago
9 hours ago