Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Princiya Dixci / 2016 நவம்பர் 03 , மு.ப. 10:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரஸீன் ரஸ்மின்
கற்பிட்டி பிரதேச சபைக்குட்பட்ட கடையாமோட்டை பிரதேசத்தில் புதிதாக பொலிஸ் நிலையமொன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனிடம் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.ஏ.எஹியா மற்றும் முன்னாள் புத்தளம் நகர சபை உறுப்பினர் எஸ்.ஆர்.எம்.முஹ்சி ஆகிய இருவருமே இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தரவின் ஆலோசனைக்கு அமைய நாடு பூராகவும் 600 புதிய பொலிஸ் நிலையம் அமைக்கும் பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.
குறித்த திட்டத்தின் கீழ் கற்பிட்டிப் பிரதேச சபைக்குட்பட்ட கடையாமோட்டை பிரதேசத்தில் புதிதாக பொலிஸ் நிலையமொன்றை அமைப்பதற்கு பொலிஸ் மா அதிபரின் கவனத்துக்குக் கொண்டு செல்லுமாறு அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
முந்தல் பிரதேசம் பெரும் நிலப்பரப்பையும், கிராமங்களையும் உள்ளடக்கியிருப்பதனால் கடையாமோட்டை, புளுதிவயல், விருதோடை, நல்லாந்தளுவ, கணமூலை தெற்கு, கணமூலை வடக்கு, சமீரகம, பெருக்குவற்றான், கொத்தாந்தீவு, பாலசோலை, கந்ததொடுவா, மூக்குத்தொடுவா உள்ளிட்ட கிராம சேவையாளர் பிரிவுகளை உள்ளடக்கிய வகையில் புதிய பொலிஸ் நிலையம் ஒன்றை அமைப்பதன் அவசியம் குறித்து அமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
49 minute ago
2 hours ago
3 hours ago