2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

பெயர் பலகை இனந்தெரியாதோரினால் சேதமாக்கப்பட்டுள்ளது

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 03 , மு.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.யூ.எம். சனூன்

புத்தளம், நியூ செட்லிமெண்ட் பாதையின் ஒரு கிலோமீட்டர் தூரம் காபட் பாதையாக மாற்றியமைப்பதற்கான வேலைத்திட்டத்துக்காக அங்கு அமைக்கப்பட்டிருந்த பெயர் பலகை இனந்தெரியாதோரினால் சேதமாக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ரஹீமின் வேண்டுகோளின் பேரில் கைத்தொழில் வர்த்தக துறை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இந்த பாதையினை காப்பட் பாதையாக மாற்றி அமைக்கும் பொருட்டு 12 மில்லியன் ரூபாய் நிதியினை ஒதுக்கீடு செய்து இதற்கான ஆரம்ப வேலைகளும் அமைச்சரினால் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தது.

இந்த திட்டத்தினை பொது மக்களுக்கு தெளிவுபடுத்தும் நோக்கில் புத்தளம் ஹுதா பள்ளி சந்தியில் இதன் விவரங்கள் அடங்கிய பெயர் பலகை நாட்டப்பட்டிருந்தது.

கடந்த வியாழக்கிழமை (01) இரவு, இதற்கு சாணம் வீசிய இனத்தெரியாதவர்கள் பலகை முழுவதும் வெள்ளை நிற மையினால் அழித்துள்ளனர்.

நேற்று வெள்ளிக்கிழமை (02) ஜூம்ஆ தொழுகையைத் தொடர்ந்து அங்கு கூடிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆதரவாளர்கள் தமது கடும் கண்டங்களைத் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X