2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

பிரியங்கர எம்.பி பதவி நீக்கம்

Niroshini   / 2017 ஜனவரி 29 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் புத்தளம் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவர் பதவியில் இருந்து, முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினரான பிரியங்கர ஜயரத்ன நீக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான அறிவித்தலை, புத்தளம் மாவட்ட அரச அதிபர் என்.எச்.எம்.சித்ரநந்த, பிரியங்கர ஜயரத்ன ஆகியோருக்கு, ஜனாதிபதியின் செயலாளர் பி.பி அபேகோன், தொலைநகல் மூலம் அறிவித்துள்ளார்.

2010ஆம் ஆண்டு முதல் புத்தளம் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவராக இருந்து வந்த ஜயரத்ன, நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், இணைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

நல்லாட்சி அரசாங்கத்தில் வகித்து வந்த அமைச்சுப் பதவியை கடந்த டிசெம்பர் மாதம் 30ஆம் திகதி இராஜினாமா செய்த பிரியங்கர ஜயரத்ன, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியுடன் இணைந்து கொண்டார். இந்நிலையிலேயே இவர் பதவி விலக்கப்பட்டுள்ளார்.

புத்தளம் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத் தலைவர் பதவிக்கான வெற்றிடத்துக்கு, இதுவரை எவரும் நியமிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X